பக்கம்:அகமும் புறமும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 187


விருந்திற் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவுமார் உளவே.

(நற்றிணை–172)

(ஆயம்–தோழியர் கூட்டம்; காழ்முளை–முற்றிய விதை முளை; துவ்வை–உம்முடைய போசரி; விருந்திற்பாணர்–புதிய பாணர்; விளர் இசை–மெல்லிய இசை; வான் கோடு–வெண்மையான சங்கு நரலும்–ஒலிக்கும்; துறை கெழு கொண்க–கடற்றுறையின் தலைவனே.)

புன்னை மரத்தையும் உடன் பிறந்த தங்கையாகக் கருதி, அதன் எதிரிலும் தலைவனுடன் விளையாட மறுத்த தலைவியின் பண்பாடும், புன்னையைத் தங்கை என்று கூறிய தாயின் பண்பாடும் அறிந்து மகிழ்தற்குரியன! இவ்வாறு பிறர் பார்க்கத் தலைவனைச் சந்திப்பது வெட்கமாகிறது என்ற குறிப்பால் அவனை விரைவில் வந்து மணந்து கொள்ளக் கூறுகிறாள் தோழி.

*****

சமய சஞ்சீவியாகிய தோழியின் அறிவுத்திறனை விளக்கும் பாடல் இது.

எம் ஊரில் தங்கலாமா?

நெய்தல் நிலக் கருப்பொருள் என்று கூறத்தக்கவை பனை, புன்னை முதலிய மரங்களும்; நாரை, சுறா முதலிய பறவை விலங்குகளும், மீன் முதலிய உணவுகளும் ஆகும். இந்நிலத்தில் வாழும் மக்கள் “பரதவர்” என்று குறிக்கப்படுவர். தலைவன் ‘துறைவன்’ என்றும் ‘சேர்ப்பன்’ என்றும் வழங்கப்படுவான். உரிப் பொருள் என்று கூறத்தக்கது தலைவி தலைவனைப் பிரிந்து ஆற்றாமையால் அரற்றும் நிலைமைதான். பெரும்பாலும் தலைவனும் தலைவியும்

13