பக்கம்:அகமும் புறமும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 • அகமும் புறமும்

பெரும்பாண் காவல் பூண்டுஎன ஒருசார்த்
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறிஉற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செலிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர்அணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த
நள்என் கங்குல் கள்வன் போல
அகன்துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே.
(நற்றிணை–40)


(நெடு நா ஒண்மணி–நீண்ட நாவையுடைய மணி கட்டி இருத்தலின் செல்வ மிகுதி கூறினார்; இரட்ட– ஒலிக்க; பெரும்பாண்–தலைவனைப் பரத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் தொழிலுடையவன்; விரிச்சி–நல்ல சொல் (சகுனம்)கேட்டல்; வெறி–வாசனை; அறுவை–அறுக்கப்பட்டது, துணி; புனிறுநாறும்–ஈன்ற அணிமை தோன்றும்; ஐயவி–வெண் சிறு கடுகு (இதனைக் கலந்தால் பேய் முதலியன அண்டா எனப் பழந்தமிழர் நம்பினர்); நெய்யாட்டு–எண்ணெய் முழுக்கு; யாக்கை–உடம்பு; சிறந்தோன்பெயரன்–தலைவனுடைய தந்தை (சிறந்தோன்)க்குப் பெயரன்.

***

‘வாரிரோ விருந்தினரே!’

தலைவன் தவற்றைத் தலைவி காணும் முறையைக் கூறும் பாடல் இது.

விடியற்காலை நேரம்–கதிரவன் உதயம் செய்ய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. என்றாலும், ஓரளவு வெளிச்சம் தோன்றிவிட்டது. இந்த நேரத்தில் ஒருவன் முக்காடு இட்டுத் தலையை மறைத்துக் கொண்டு, ஊரின் வெளிப்புறத்தே இருந்து வருகிறான்; ஏதேனும் ஒலி