பக்கம்:அகமும் புறமும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 • அகமும் புறமும்

(தடமருப்பு-வளைந்த கொம்பு; மடநடைக்குழவி-தளர்ந்த நடையுடைய கன்று; காண்தகு-அழகிய; கொடுங்குழை-வளைந்த மகர குண்டலம்; செழுஞ்செய் பேதை-செழுமையான சிவந்த நிறமுடைய இவள்; தகைபெற-அழகுசெய்ய; பிறைநுதல்-துடையினள்-தனது பிறைச் சந்திரன் போன்ற நெற்றியில் தோன்றிய சின்ன வியர்வைத் துளிகளைப் புடைவையின் தலைப்பால் துடைத்துக் கொண்டு; நப்புலந்து-நம்மேல் கோபித்துக் கொண்டு; அட்டிலோளே-சமையல் கட்டில் உள்ளாள்; சிவப்பாள் அன்று-கோபத்தால் கண் சிவக்க மாட்டாள்; சிறிய முள்-கம்மே-சிறிய முள்ளைப் போலும் இவள் பற்களால் சிரிப்பதைப் பார்க்கலாம்.)

தலைவி கோபித்துக்கொண்டு சமையல் கட்டில் இருக்கின்ற இந்த நேரத்திற்கூட அவளுடைய குழையணிந்துள்ள முகத்தையும், வாழை இலையை அரிவதால் சிவந்து போன கையையும், சமையல் செய்வதால் உண்டாகும் வியர்வையைத் துடைத்துக் கொள்ளும் அழகையும் காண்கிற இத்தலைவன் ஒரு சிறந்த கலைஞனாகத்தான் இருத்தல் வேண்டும். எனவேதான் இவன் வாழ்க்கையில் இத்தவற்றைச் செய்துவிட்டான் போலும்!

*****

‘நான் இறந்தால் தொல்லை திரும்’

இருவரும் விட்டுக் கொடாத பொழுது அவர்களைச் சேர்த்து வைக்கத் தோழி கையாண்ட தந்திரம் இது.

இரண்டு பேர் மனம் மாறுபட்டுப் பூசலிடும் பொழுது இடை நின்று நீங்கள் சமாதானம் செய்ய முற்பட்டதுண்டா? சண்டை வலிவாக நடைபெறும் பொழுது சமாதானத்திற்குப் போகிறவர் மிகவும் வன்மையுடையவராய் இருத்தல் வேண்டும். பல சமயங்களில் சண்டை