பக்கம்:அகமும் புறமும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 • அகமும் புறமும்

உண்டாக்குமா? மூலப் பொருள்களாகிய பஞ்சும் எண்ணெய் விதைகளும் இருந்தால்தானே துணியும் சோப்பும் உண்டாக்க முடியும்? இந்நிலையில் நாம் என்ன செய்கிறோம்? நமது நாட்டில் உண்டாகிற பஞ்சையும் எண்ணெய் விதைகளையும் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம்; அவற்றையே மீண்டும் துணியாகவும், சோப்பாகவும் பெறுகிறோம். (இது விடுதலைக்கு முந்தைய நிலை) இவ்வாறு நடைபெற்று வருமானால், நமது பொருளாதார நிலை கீழே போகாமல் வேறு எங்ஙனம் இருக்க முடியும்?

இஃதொரு புறமிருக்க, போர் நடைபெற்ற சென்ற சில ஆண்டுகளில் எண்ணற்ற பொருளை ஏற்றுமதி செய்தோம். பணத்தால் நிறைந்த பிரிட்டனைக்கூட நமக்குக் கடன்கார நாடாக்கி விட்டோம். ஆனால், இந்நிலை எங்ஙனம் முடிந்தது? நமது நாட்டிற்குத் தேவையான பொருள்களை நாமுபயோகிக்காமல் பிறருக்கு அனுப்பி வைத்ததனாலேயே இது முடிந்தது. அப்பொழுது நாம் அனுபவித்த வறுமை சொல்லிலடங்காது. இன்று நாமடைந்த பயனென்ன? நமது கடனை அத்தேசம் திருப்பித்தர இயலுகிறதா? சாதாரண மக்கள் ஒருவர்க்கொருவர் கடன்படுவதும் கொடுப்பதும் போலத் தேசங்கள் செய்ய முடியாது. சாமான்கள் மூலமாகவே கடனைத் தீர்க்க இயலும்.

இவற்றிலிருந்து நாம் அறிவதென்ன? சாதாரணமாக ஒரு நாட்டின் பொருளாதார நிலை கேடு அடையாமல் இருக்கவேண்டுமேயானால், அந்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி என்ற இவ்விரண்டும் தம்முள் ஒத்த அளவுடையனவாய் இருக்க வேண்டும். இன்றேல், தீங்கே விளையும். அமெரிக்காவைப் போன்ற தேசம் பணச் செல்வத்தோடு, பொருள் வளத்தையும் பெற்றிருப்பதால், மேற்கூறிய