பக்கம்:அகமும் புறமும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238 • அகமும் புறமும்


இன்னும் சற்று ஆழமாக நோக்கினால் மேற்சொன்ன உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

கடலிலிருந்து ஆவியாகிச் செல்லும் நீரின் அளவும், மழையாகக் கடலுள் வந்து சேரும் அளவும் ஒத்து இரா.

கடலிலிருந்து ஆவியாவது மிகுதி.

வந்து சேரும் நீரின் அளவு குறைவு என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையே.

இத்தகைய ஓர் உவமை கூறுவதன் மூலம் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் அளவு மிகுதி; இறக்குமதி ஆகும் பொருள்களின் அளவைவிட மிகுதி.

மேற்காட்டிய அடிகளால் அரேபியா, பர்மா ஆஸ்திரேலியா சீனம் முதலிய வெளிநாட்டவருடன் இத்தமிழர் வாணிகம் செய்ததுடன், கங்கைவெளி, இலங்கை முதலிய அண்டை நாடுகளுடன்கூட வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்று அறிகிறோம்.

இத்தகைய நிலையை இக்காலப் பொருளதாரச் சொற்களால் கூறவேண்டுமானால், ‘சமன் செய் வாணிகம்’ (Balanced Trade) என்று கூறலாம்.

சுங்கவரியும் பயனும்

இதனைப் பார்க்கும்பொழுது, எல்லா நாட்டினரும் அவரவர் விருப்பம் போல வேண்டுவனவற்றைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் வாணிகம் செய்யலாம்போலும் என்று நினைத்துவிடுதல் ஆகாது. அவ்வாறு செய்கின்றதை இக் காலத்தார் ‘கட்டுப்பாடற்ற வாணிகம்’ (Free Trade) என்று கூறுவர். இத்தகைய ஒரு வாணிகமே நாட்டின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஏற்றது என்று வாதாடு-