பக்கம்:அகமும் புறமும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248 • அகமும் புறமும்


இன்றும் கூடப் பொதுவாக இந்தியப் பெண்கள், சிறப்பாகத் தமிழகத்துப் பெண்கள் அணிகலன்கள் என்ற பெயரில் பொன்னுக்கு அடிமையாக இருத்தலைக் காண்கிறோம்.

மிகப்பெருஞ்செல்வர் வீட்டில் முதலீடு என்ற முறையில் (Investment) பெண்கள் பொன்னும், பொருளும் சேர்த்து வைத்தனர்.

ஆனால் நடுத்தர மக்கள் வாழ்க்கையில் இவ்வாறு நடைபெறுவது கொடுமையானது. பொன்னுக்கென இடப்படும் தொகை வளர்ச்சி அடையாத மூலதனம்; அன்றாடம் பயன் தராததும் ஆகும்.

எனவே ஒரு வாணிபம் செய்து அதன் வாயிலாய்க் கிடைக்கின்ற சிறு பொருளை மேலும் வளர்த்தற்குரிய முறையில் முதலீடு செய்யாமல் பொன்னை வாங்கிச் சேமிப்பது அறியாமையின் கொடு முடியாகும்.

ஆனால் நம் முன்னோர் (பண்டைத் தமிழர்) இவ்வாறு செய்யவில்லை என்று அறிகிறோம்.


நள் இருள் விடியல் புள் எழப் போகி–
புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகில்
உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரைதெரிந்து,
புகர் வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ–
நாள் மோர் மாறும் நல் மா மேனி
சிறு குழை துயல்வரும் காதின், பணைத்தோள்,
குறு நெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்–
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி,
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை, நல்ஆன் கருநாகு, பெறுஉம்.

(பெரும்பாணாற்றுப்படை 155–165)

[செறிந்த இருள் மெல்ல விலகும் காலத்து பறவைக் குலம் உறக்கம் நீத்து எழுகின்றன. புலியினது முழக்கம் போல