பக்கம்:அகமும் புறமும்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

321 • அகமும் புறமும்

எடை போடத் தொடங்கியவுடன் எவ்வாறாயினும் அவர்களினும் தான் மேம்பட்டவன் என்று பிறர் கூற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. தான் ஆளும் இந்த நிலம் ‘பிறமன்னர்கட்கும் பொது’ என்ற சொல்லைப் பொறுக்காத ஒரு நிலை வந்துற்றது.


“வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறா அது
இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப”
                                                               (புறம்-8)

[பிற அரசர் புகழும்படி இன்பத்தை விரும்பிய வாழ்வை நடத்தாமல், இந்த உலகம் பிற மன்னருக்கும் பொது என்று பிறர்சொல்லும் சொல்லைப் பொறுக்காமல்.]

அறிவால் ஆராய்ந்த பொழுது பெற்ற பயன் இதுவாகும்.

உணர்வு வழி வாழ்வு

உணர்ச்சியால் ஆண்ட பெருமக்களுள் தலையாயவன் பாரி வள்ளல். அறிவை அடக்கிக்கூட உணர்ச்சிக்கு இடந்தந்த பெருமை அப்பெருமகனுக்கே உண்டு. ‘இவ்வளவு தூரம் அறிவை இழந்து உணர்ச்சி வசப்படலாமா? அதுவும் மன்னனாகிய அவன் இவ்வாறு செய்யலாமா?’ என்றுகூடக் கேட்கப்படலாம். உணர்வை இழந்து, அன்பை இழந்து, தம்மொடு பொருது மடிகிறவரும் தம்மைப் போன்ற தமிழர் என்பதை மறந்து, தமிழ் மண்ணில் தமிழ்க் குருதியைப் பரவவிட்ட நூற்றுக் கணக்கான தமிழ் மன்னர், உணர்ச்சியை விட்டு அறிவின் துணை கொண்டனர். அவர்கள் எதிரில் பாரியும் பாரி போன்ற ஒருசிலரும் அறிவைவிட்டு உணர்ச்சியைப் பெருக்கி வாழ்ந்தது தவறா? ‘உடையுடுத்தாத ஊரில் உடை-