பக்கம்:அகமும் புறமும்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அமைச்சன் • 341


கடமை புரிபவன்

இவ்வாறு புகழ்பெற வேண்டுமாயின், எத்தகைய செயல்கள் நிகழ்த்தவேண்டும் என்று கூறத்தேவை அன்று நல்லன தீயனவற்றைக் கண்டு, ஆய்ந்து, இவை மன்னனிடத்துக் காணப்பெறினும் மாவிசும்பு வழங்கும் பெரியோர்போல அடக்க வேண்டுமாம் அவனை. பாம்புப்புற்றுள் கை விடுவதும் தவறு செய்கின்ற மன்னைத் திருத்தப் புகுவதும் ஒன்றுதான். எனினும் அதனால் வரும் ஏதம் பற்றிக் கவலைகொள்ளாமல் தன் கடமையைச் செய்பவனே அமைச்சன் என்று கூறப்படத் தகுதி உடையான். மன்னனை முழு வல்லமை படைத்த இறைவன் என்று கருதிய அந்நாளிற்கூட அமைச்சனுக்கு இத்துணைப் பெருமை தந்தனர் தமிழர். இப்பெருமை காரணமாகவே அவனுடைய கடமைகளும் மிகுந்து விடுகின்றன. ஏனைய நாட்டில் அமைச்சனைப்பற்றி எழுதியவர்கள் அவன் தனித் துய்மைபற்றிக் கூறினார்கள். ஆனால், அவனுடைய தலையாய கடமைகளுள் ஒன்றாக மன்னனைத் திருத்துவதையும், அத்திருத்தம் செய்யும் முயற்சியில் தனக்கு ஊறு நேர்வதாயினும் அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இத்தமிழர் கருதினர்.


அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
                                                             (குறள்–538)

என்று குறளாசிரியர் குறிப்பிடுவது இதே கருத்தைத்தான்.


‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.’
                                                             (குறள்–691)

என்று மற்றவர்களை நோக்கிக் கட்டளையிட்ட வள்ளுவர் 'உழையிருந்தான்' என்ற அடைமொழியால் அமைச்சர்கள்