பக்கம்:அகமும் புறமும்.pdf/349

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342 • அகமும் புறமும்

அரசனுடன் சேர்ந்தும் சேராமலும் இருத்தல்கூடாது என்பதையும் குறிப்பிடுகிறார். தனக்கு ஏற்படப்போகும் சில தீங்கினைப் பற்றிக் கவலையுறாத அமைச்சனைப் பற்றியே பந்தமிழர் பெருமைப்பட்டனர். இத்துணைச் சிறப்புடையவனை வறிதே அமைச்சன் என்று மட்டும் வழங்காமல், காவிதி என்ற பட்டம் தந்து, தலைமை அமைச்சன் ஆக்கினர். அத்தகைய காவிதியமைச்சனைப் பற்றியே மதுரைக்காஞ்சி பேசுகிறது.

பழந்தமிழன் கண்ட இவ்வமைச்சன் எங்கே, ‘மெக்காவிலி’ கண்ட அமைச்சன் எங்கே! தமிழன் பண்பாடு எத்துணை உயர்ந்ததென்பதற்கு இதனினும் சான்று வேறு வேண்டுமா?