பக்கம்:அகமும் புறமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 29


மலரின் பல்வேறு நிலைகளை அறியாமல் பெரும்பான்மையர் அரும்பு முதலாக செம்மல் ஈறாக உள்ள எல்லா நிலைகளையுமே மலர் எனக் கொள்கின்றனர்; கூறுகின்றனர்.

அதே போல் காதல் என்பதன் உண்மைப் பொருள் அறியாதவர்கள் அது ஒரு வகை மனநிலை என்று உணரமாட்டாமே எல்லாவற்றையும் இச்சொல்லால், குறிப்பிடுகின்றனர்.

இதனை வலியுறுத்துவதே,

“சிலர் அதன் செவ்வி தலைப் படுவார்”

என்ற தொடர்.

மனநிலை மாற்றத்திற்கு உரியது.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குரியது.

ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில், ஒரு குறிப்பிட்டவரைக் காணும்பொழுது அமைவது என்பன போன்ற கருத்துக்களையெல்லாம் மேற்காட்டப் பெற்ற குறட்பா விளக்குகிறது. .

இக்குறட்பா, குறுந்தொகை மிளைப் பெருங்கந்தனின் பெருந்தொகை விளக்கம் என்னலாம்.

இதே போலவே குறுந்தொகை 204ஆம் பாடலின் விளக்க உரையாக அமைவது.

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.

(குறள்–1110)

என்ற குறட்பாவாகும்.

'விருந்தே காமம்' என்று கவிஞன் அன்றாடம் விளை கின்ற புதுமை குறித்துப் பேசுகின்றான்.

வள்ளுவர் மனித மனநிலையில் (Human Psychology)