பக்கம்:அகமும் புறமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 • அகமும் புறமும்

 நுண்மை அறிந்து, மிளைப் பெருங்கந்தன் பாடலை வேறுவிதமாகக் காண்பிக்கிறார்.

மனித உளவியல் வல்லுநரான வள்ளுவர் அறிதோறு அறியாமை கண்டற்றால் என்று கூறும்பொழுது 'பலகாலம் இத்தலைவியின் உடன் வாழ்ந்தும் நேற்று இந்தப் புதுமையைக் காணவில்லையே’ என்றும் வியக்கும் தலைவனின் மன நிலையைக் குறிப்பிடுகின்றார்.

இன்னும் ஒருபடி மேலே சென்று பலகாலம் ஒன்றித்து வாழும் தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் பரிபூரணமாக அறிந்துகொண்டதாக நினைக்கும்பொழுதுகூட அது பூரணத்துவம் அடைவதில்லை என்று உணர்வர். இதனையே,

'அறிதோறும் அறியாமை கண்ட அத்தன்மை போல்' என்று பேசுகிறார்.

அறிவு வளரும் இயல்புடையது. எனவே நேற்றைவிட, இன்றும், இன்றைவிட நாளையும் வளர்கின்ற தன்மையது.

அதனால் இன்றைய அறிவு வளர்ச்சியால் நேற்றைய நம் அறியாமையை அறிய முடிகின்றது.

இவ்வாறு கூறுவதன்மூலம் எத்துணை ஆண்டுகள் ஆனாலும் காதலில் தோன்றும் புதுமை, முதல் நாள் அறியாமையை அறிவிக்கின்றது என்று பெற வைக்கின்றார்.

இந்தக் குறட்பாவை இன்னமும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஐம்பதாண்டுகள் இல்லறம் நடத்தி உடல் தளர்ந்த நிலையில் உள்ள தலைவன் தலைவியர் உடலுறவின் மூலம் புதிய இன்பத்தைக் காண முடியுமா? நிச்சயமாக முடியாது.

அப்படியிருக்க, காமம் செறிதோறும் சேயிழையார் மாட்டு அறிதோறும் அறியாமை கண்ட அற்று (அத்தன்மையது) என்று இப்பேராசான் பாடுவானேயானால்