பக்கம்:அகமும் புறமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 37

இவ்வினாவிற்கு விடை பலர் பலவாறாகக் கூறினர். ஆனால், இவை இரண்டின் அடிப்படையையும் நன்கு ஆய்ந்தால், சில உண்மைகள் நன்கு விளங்கும். துறவி எதன்பொருட்டு வாழ்கிறான்? தன் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு என்று கூசாமல் விடை கூறலாம். ஆனால், இல்வாழ்வான் தன் வாழ்வோடு, பிறர் வாழ்வையும் பயனுடையதாகச் செய்யவே வாழ்கிறான்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை(குறள் - 41)

என்பது குறள். எனவே, இரு பயன் எய்த வாழும் இல்வாழ்கையே வள்ளுவர் பெரிதும் விரும்புகிறார் என்பதில் ஐயமின்று. இது கருதியே அவர், ‘அறன்’ எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று கூறுகிறார். இல்வாழ்க்கை என்ற ஒன்றாலேயே உலகம் நன்கு வாழமுடிகிறது. தான் ஒருவன் மட்டும் வாழ வழி செய்யும் துறவறத்தைக் காட்டிலும் இல்லறத்தையே இத்தமிழ்ச் சமுதாயம் பெரிதும் விரும்பியது. அது கருதியே போலும் இறைவனைக்கூட ‘அம்மையப்ப’னாக இச்சமுதாயம் கண்டது! மேலும், இயற்கையோடு ஒன்றிய வாழ்வு நடத்துதலே மனிதனுக்கு ஏற்றது. இயற்கை வெள்ளத்தை எதிர்த்து நீந்திச் செல்லுதல் என்பது ஒரு சிலருக்கு ஒல்லுவதே தவிர, அனைவரும் செய்தற்கு ஏற்றதன்று. மேலும், பலருடைய நன்மை கருதி வாழும் ஒரு வாழ்க்கை, தன் நன்மை ஒன்றையே கருதி வாழும் வாழ்க்கையைவிடச் சிறந்தது என்பதில் தடை என்னை? அன்றியும், உயிர் வாழ்வின் அடிப்படையில் அமைந்திருப்பது 'அன்பு’ என்ற ஒன்றாகும். அதன் இன்றியமையாமை பற்றிப் போலும் ஓர் அதிகாரமே வகுக்கிறது குறள். அன்புடைமை அத்துணைச் சிறந்ததாயின், அதனை வளர்க்கும் வழி என்ன? இல்வாழ்க்கையைவிட அன்பை வளர்க்கும். உறுகருவி ஒன்று உண்டோ? இவை எல்லா