பக்கம்:அகமும் புறமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 43

இருவரும் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ள வேண்டாவா? தெரிந்துகொள்ள எளிய ஒருவழி கூறுகிறார் ஆசிரியர். குடும்பம் நடத்துதல் அவ்வளவு எளிய காரியம் அன்று. இரண்டு வேறுபட்ட மனங்கள் கருத்து ஒருமித்து வாழ வேண்டிய சமயத்தில் எத்தனை இடர்ப்பாடுகள் தோன்றும்! எல்லாவற்றையும் விடப் பெரிய ஓர் இடர்ப்பாட்டைக் கூறுகிறது குறள். இளம்பருவம் உடைய ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து வாழும் பொழுதுதான் இப்பெரிய இடர் தோன்றும். இதுவே ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் ஐயம். ஐயோ! எத்தனை நல்ல வாழ்க்கைகள் இந்த மூன்று எழுத்துக்களால் (ஐயம்) பாழாயின! ஐயம் என்ற ஒன்று புகுந்துவிட்டால், அது முற்றச்சிறிது காலங்கூட வேண்டுவதில்லை. ஓயாது நெருங்கிப் பழக வேண்டிய கட்டுப்பாடுடைய இருவருள் இது புகுந்துவிட்டால், அதன் பின்னர் ஒவ்வொரு சொல்லும் செயலும் புதுப் பொருளுடனே தான் காட்சியளிக்கும். வெகு விரைவில் இது முற்றிக் கனிந்து பயனளித்து விடும். இதனால் விளையும் அல்லல், கொலை வரையிற் கொண்டு செல்லும் என்பதை ‘ஷேக்ஸ்பியர்‘ எழுதிய ‘ஒதெல்லோ’ நாடகத்தால் அறிகிறோம். ஏன்? தினம் தினம் செய்தித்தாள்களில் வரும் இத்தகைய செய்திகளாலும் அறிகிறோம். ஆகவே, இதனைத் தடுக்கக் குறள் முற்படுகிறது. எவ்வாறு? ‘மனத்து மாசில்லாது இருப்பதே அறம்,‘ என்று கூறி, ‘செயற்பால தோறும் அறனே’ என்று வலியுறுத்துவதால் மனத்துய்மை எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்கிறோம். மனத்துய்மையுடைய இருவருள் ஒருவர் மற்றவர்மேல் ‘ஐயம்’ கொள்ளுதல் எவ்வளவு தவறானது! ஆனாலும், இத்தவற்றை இருபாலாரிலும் ஆண்பாலாரே மிகுதியுஞ் செய்பவராதலின், அவர்கட்காகவே இக்குறள் எழுந்தது. ‘சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும்?’ அதாவது ஒரு பெண்ணைக் காக்க வேண்டும் என்று கருதி அவளை

4