பக்கம்:அகமும் புறமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 • அகமும் புறமும்

பொறுப்பாளர்: இக்கால விஞ்ஞானமும் மனத்தத்துவமும், தாய் தந்தையரே என விடை கூறுகின்றன. தாய் தந்தையர் நற்பண்புகள் உடையவராய் இருப்பின், குழந்தைகள் வேறு பண்புகள் உடையவர்களாக இருத்தல் இயலாது. மனத் தத்துவம் நன்குணர்ந்த வள்ளுவர் இக்கருத்தைப் பலவிடங்களில் வலியுறுத்திச் செல்கிறார்.

மனத்துயார்க்கு எச்சம் நன்றாகும்
(குறள்-456)

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்
(குறள்-114)

என்ற இவ்விரண்டு குறள்களும் ஒரு பெரிய உண்மையை நமக்குக் கூறுகின்றன.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறன்
(குறள் 34)

என்று கூறிய ஆசிரியர், ஒருவன் அற வாழ்க்கை வாழ்கிறானா என்று அறிந்துகொள்ள இங்கு வழி கூறுகிறார். எவ்வளவுதான் ஆராய்ந்தாலும் ஒருவனுடைய புற வாழ்க்கையை வைத்துக்கொண்டு அது அறவாழ்வு என்ற முடிவுக்கு வரமுடியாது. தூய்மையும், செம்மையும் உடைய வாழ்வு, பிறரை ஏமாற்றக்கூட நடத்தப்படலாம். அவ்வாழ்க்கை அத்துணைச் சிறப்புடையது அன்று என்று குறிக்கவே ‘ஆகுல நீர பிற' (குறள்—34) என்றும் கூறினார் ஆசிரியர். மனத்துக்கண் உள்ள தூய்மையை அறிய, சொல்லும் செயலும் பயன்படுதல் உண்மையாயினும், சில சமயங்களில் மனத்தூய்மை இன்றியும் புறத்தூய்மை காணப் பெறுகிறது. இத்தகைய நடிகர்களின் அந்தரங்கத்தை அறிய ஏதேனும் வழி உண்டோ? வெளியில் இவ்வளவு தூய்மை யுடைய இவர்களுடைய அகம் எத்தகையது என்று காண்டல் வேண்டுமே! இதோ