பக்கம்:அகமும் புறமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 59

வழுவாது நின்று 'எல்லா இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல்' எனப் பொருள் கூறினார். கலித்தொகையில் 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' (கலி. 133) என வருவதும் காண்டற்குரியது. இப்பண்பாடு இல்லாத அறிவு, பெருந்தீங்கை விளைத்து 'அணுகுண்டு' தோற்றுவதற்கே பயனாம். இது கருதியே போலும் ஆசிரியர்,

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
 மக்கட்பண்பு இல்லா தவர்

(குறள்–997)

எனக் கூறினார்! பண்பாடு இல்லாதவர் அறிவு, அழித்தல் ஒன்றிற்கே காரணமாகும் என்பதை இதனால் நன்கு அறியலாம். பண்பாட்டிற்கு, ஆசிரியர் தரும் சிறப்பு இத்துணையது என்று அறிந்தபின், மக்கட்பேற்றில் எடுத்துக் காட்டப்பெற்ற குறள்களின் பொருளை நன்கு சிந்திக்க முற்படல் வேண்டும். பிள்ளைகள் கூர்மையான் அறிவும், சிறந்த பண்பும் அடையப்பெற்றவராக இருத்தல் வேண்டும் என்று கூறுவதன் கருத்தென்ன? பிள்ளைக்கலி தீர்ப்ப தொன்றற்காகவே பிள்ளைப்பேறு வேண்டும் என ஆசிரியர் கூறி இருப்பின், இத்தனை அடைமொழிகள் தந்திரார். எனவே, இதன் உட்கோள் ஒன்று இருத்தல் வேண்டும். அது யாது? பிள்ளைகள் நாளைச் சமுதாயத்தின் தூண்களாக இருக்க வேண்டுபவரல்லரோ? அவர்களின் சிறப்பும் சிற்ப்பின்மையும் நோக்கித்தானே நாளைச் சமுதாயம் அமையப் போகிறது? எனவே, நல்ல சமுதாயம் நாட்டில் அமைய வேண்டுமாயின், நன்மக்கட்பேறு வேண்டும் என ஆசிரியர் வலியுறுத்துகின்றார். வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும் ஆசிரியர், நன்மக்கட் பேற்றையும் அதில் ஒரு கூறாக வைக்கிறார்.

சமுதாயப் பிராணி

ஒரு மனிதன் வாழ்க்கை, அகம்–புறம் என இரு பகுப்பாகி இயல்கிறது. அகம் பெரும்பாலும் வீட்டினுள்


5