பக்கம்:அகமும் புறமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 81

என்ற அதிகாரத்தின் பின்னர் ‘விருந்து ஓம்பலை’ வைத்துள்ளார் ஆசிரியர்.

சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவனும் தன் கடமைகளில் ஒன்றாக விருந்தோம்பலைக் கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர் கருத்துப் போலும்! அன்றேல்,


இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

(குறள்–81)

என்று கூறியிருக்க மாட்டார். விருந்தினரை வரவேற்பதற்காகவே இல்லறம் நடத்துகிறோம் என்று அவர் கூறுவதில் எவ்வளவு உண்மைகள் அடங்கி உள்ளன! இல்லறம் நடத்துபவன் சமுதாயத்தில் ஓர் உறுப்பாகிறான்.எனவே,நாட்டிற்கும் அவன் உற்ற ஒரு துணை ஆகிறான். அத்தகையவன் சமுதாயத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்றால், அவனுக்கு நட்பு அதிகமாக இருத்தல் வேண்டும். நட்பினர் மிகுதியாதற்கு விருந்தோம்பல் ஒரு சிறந்த வழி அன்றோ?

ஓர் அறம்

இதன்றியும் மனிதனின் கடமை ஒன்றை நிறைவேற்றவும் விருந்தோம்பல் பெரிதும் பயன்படுகிறது. பசித்து வந்தவர்க்கு ஒரு பிடி சோறு தருதலைக் காட்டிலும் சிறந்த அறம் வேறு யாது உளது? ஏற்றலுக்கு உரிய மனப்பான்மை இல்லாமலும் அதற்கு மனம் துணியாமலும் உள்ள ஒருவரை எவ்வாறு உச்சரிப்பது? அவர் எக்காரணத்தாலும் ஒருவரிடம் சென்று உணவு வேண்டும் என்று இரக்கமாட்டார். அத்தகைய ஒருவரை விருந்தினராகக்கருதி அழைத்து உபசரித்தாலன்றி, வேறு எவ்வழியில் அவரைப் போற்ற முடியும்? இது கருதியே போலும்