பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

97


ஒலிக்கும் முன்னர், எல்லா ஒட்டக்காரர்களும் அரவராக்கு உரிய இடத்தில் (Marks) அசையாமல் இருந்திட வேண்டும்.

3. எல்லா அகில உலக ஒடுகளப் போட்டிகளிலும், 100 மீட்டர், 200 மீட்டள், 400 மீட்டர் ஓட்டங்கள்; மற்றும் 4x100 மீ, 4x400 மீ. தொடரோட்டங்களில் கீழ்க்கண்டவாறு உச்சரிக்கப்பட்ட பிறகே, துப்பாக்கி ஒலி எழுப்பி ஓட விட வேண்டும்.

உங்களிடத்தில் நில்லுங்கள் (On your Marks) அசையாமல் இருங்கள் (Set) இவ்வாறு ஓட விடுபவர் (Starter) ஆணையிட்ட, எல்லா ஒட்டக்காரர்களும் அவரவர் இடங்களில் அசையாமல் நிற்க, துப்பாக்கி ஒலி ஒலிக்கப்பட வேண்டும்.

400 மீட்டர் தூரத்திற்கு மேல் அமைந்த எல்லா ஓட்டங்களுக்கும், உங்களிடத்தில் நில்லுங்கள் என்று ஆணையிட்ட பிறகு, எல்லா ஒட்டக் காரர்களும் ஒடத் தயாராக நின்றவுடன் துப்பாக்கியை ஒலிக்க வேண்டும்.

4. ஓடத் தொடங்கும் கோட்டில் நிற்கிற ஒட்டக் காரர்கள் சரியாக நிற்கவில்லை, என்று ஓடவிடுபவள் ஏதாவது ஒரு காரணத்தால் நினைத்தாரானால், அவர் எல்லா ஒட்டக்காரர்களையும் எழுந்து நிற்குமாறு, ஆணையிடுவார். உடனே அவரது உதவியாளர், மீண்டும் அவர்களை பழைய இடத்திற்குப் போய் நிற்குமாறு ஏற்பாடுகளைச் செய்வார்.

100 மீ, 200 மீ, 400 மீ போன்ற தூரமுள்ள இட்டங்களில், குனிந்து நின்று புறப்படுகிற (Crouchstart) ஒட்டமுறை தான் பின்பற்றப்படவேண்டும்.