பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


தொடர்ந்து ஓடத் தொடங்குவது இயற்கையானது. அது பொதுவாக நடக்கிற நடை முறை தான்.

அந்தத் தவறான தொடக்கத்தை ஆரம்பித்து வைக்கின்ற ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஒட்டக்காரர்கள் தாம் எச்சரிக்கப்பட வேண்டும். பின் தொடர்ந்தவர்கள் அல்ல.

ஒட விடுபவர், தவறான தொடக்கத்தை யாள் முதலில் ஆரம்பித்து வைத்தது என்பதை அறிந்து, அவரை அல்லது அவர்களைத் தான் எச்சரிக்கவேண்டும்.

உந்தி ஒட உதவும் சாதனம்
(Starting Black)

9. விதிகளுக்கு உட்பட்டவாறு அமையப் பெற்ற உந்தி ஒட உதவும் சாதனங்களை, 100மீ. 200மீ, 400மீ, ஓட்டங்களிலும், ஓடும் ஒட்டக்காரர்கள் 4x200, மீட்டள் 4x400 மீட்டர் தொடரோட்டங்களில் ஒடும் முதலாவது தொடக்க ஒட்டக்காரர்கள் (First Leg) மட்டுமே பயன்படுத்தலாம்.

மற்ற ஒட்டப் போட்டிகளில் கலந்துகொள்கின்ற ஒட்டக்காரர்கள் உந்தி ஒட உதவும் சாதனங்களைப் பயன் படுத்தக்கூடாது.

9 - (1) உந்தி ஒட உதவும் சாதனங்கள் கடினமான அமைப்புடனும், ஓடுகிறவர்களுக்கு வேறு எந்த வகையிலும் உதவி செய்யாதவாறும் அமையப்பெற்றிருக்க வேண்டும்.