பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



102

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


இரண்டு கால்களும் இருந்து ஒடத்தொடங்குவதற்கு முன்பாக, நன்றாக அழுத்திப் பின்னோக்கி உதைப்பது போலம்உருவாக்கப்பட்டிருக்கும்.

பாதப்பட்டைகள் கட்டையின் மீது நன்றாக, உறுதியாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்டிருப்பது, ஒட்டக்காரருக்கு ஓடுவதற்காக எழும்பும்போது எந்தவிதமான தடையையும் இடைஞ்சலையும் ஏற்படுத்தாத வண்ணத்தில் இருக்க வேண்டும்.

பாதப் பட்டைகள் உட்புறம் குவிந்ததாகவும், கால களை அதில் வைக் கும் போது, சரியாக அமர்வதுபோலவும், சரிவு கொண்டதாகவும் அமைக்கப்படல் வேண்டும்.

பாதப் பட்டைகளின் பரப்பளவானது, ஒட்டக் காரர்களின் காலணியில் ஊன்றப்பட்டிருக்கும் ஆணிகளை சிரமமின்றி அழுத்துவதற்கேற்ற இடவசதியுடன், ஆணிகளை ஊன்றி உதைத்து எழும்போது, அதனை ஏற்று எளிதாக வெளிவிடுகின்ற பொருளால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

உறுதியான பொருளால் ஆக்கப்பட்டிருக்கும் பாதப் பட்டைகள் முன்னும் பின்னும் நகர்த் தி, தேவைக்கேற்றவாறு சரி செய்து கொள்கின்றவாறு அமையப்பெற்று ஓடுவதற்காக உதைத்தெழும்போது, அசைந்து கொடுத்து ஓட்டத்தை தடைசெய்வதாக இல்லாமல் அமைக்கப்படல் வேண்டும். எல்லாப் பாதப் பட்டைகளும், இரண்டு கால்களும் வசதியாக அமர்ந்திருக்குமாறு, முன்னும் பின்னும்