பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

103


நகர்த்துவது போன்ற அமைப்பில் தான் உருவாக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு சரிசெய்து கொள்கிற போது (Adjustment) உறுதியாகப் பற்றிக்கொள்ளும் எந்திர அமைப்பில் அவைகள் செய்யப்பட்டிருப்பதுடன், ஒட்டக்காரர் விரைவாகவும் எளிதாகவும் அவற்றைக் குறைந்த நேரத்தில் மாற்றி அமைத்துக் கொள்வதற்கேற்றவாறும் அமையப் பெற்றிருக்கவேண்டும்.

9.5. ஓடவிடுபவரது உதவிக்காக, ஒட உதவும் சாதனங்கள், தவறான தொடக்கத்தைக் கண்டு பிடித்துதவும் சாதனத்தின் உதவியுடனே தரையில் பதிக்கப்படவேண்டும். 10. போட்டியின் போது, போட்டியை நடத்துபவர்கள் வழங்குகின்ற ஒட உதவும் சாதனங்களையே, ஒட்டக்காரர்கள் பயன்படுத்திட வேண்டும்.

கால வெப்ப தட்ப சூழ்நிலை தவிர, நடைபெறும் மற்ற எல்லா போட்டிகளிலும், ஒட்டக்கரார்கள் அவரவரது சொந்த சாதனங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஓடும் பாதையை மாற்றி அமைக்கின்ற ஆற்றல் படைத்த காலங்களில் (All weather Tracks) போட்டு அமைப்பாளர்கள் அளிக்கின்ற ஒட உதவும் சாதனங்களையே பயன்படுத்த வேண்டும்.

முடிவெல்லை
(The Finish)

11. முடிவெல்லைக் கம்பங்கள் (Finish Posts) இரண்டு வெள்ளைக் கம்பங்கள், இறுதி எல்லையைக் குறிக்கும் கோட்டின் இருபுறமும், கோட்டின் எல்லைக்