பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


குறியிலிருந்து (இருபுறமும்) 30 செ.மீ. தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

முடிவெல்லைக் கம்பங்களின் உயரம் 1.4 மீட்டரும் அகலம் 80 மி, மீட்டரும், கனம் 20 மில்லி மீட்டரும் இருப்பதுடன், நல்ல உறுதியானதாகவும் இருக்க வேண்டும்.

காற்றடிக்கும் வேகத்தின் திசையையும், திறத்தையும் அறிந்து, சரியாக இராது என்று அபிப்பிராயப் படுகிறபொழுது, கம்பளிநூல் கயிற்றை (Worsted) நிறுத்தியுள்ள இரண்டு கம்பங்களுக்கு இடையே கோட்டிற்கு மேல் தரையிலிருந்து 1.22 மீட்டர் உயரத்தில் கம்பங்களில் கட்டப்படவேண்டும். அப்படிக் கட்டுகின்ற நூலானது. தொடக்க கோட்டிலிருந்து எல்லைக் கோட்டிற்கு அருகாமையில் இருப்பது போல் கோட்டின் உட்புற அளவின் இடத்தில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தானியங்கி மின்சார சானங்கள் மூலம் நேரம் பார்க்கப்படுகிற பொழுது, இவ்வாறு கயிறு கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

12. முடிவெல்லைக் கோட்டின் உட்புற எல்லையை முதலில் கடந்து முடிக்கின்ற ஒட்டக் காரர்களே, முதலாவது இரண்டாவது என்கிறவாறு இடம் அளிக்கப்படுகின்றனர் அப்படி இடம் (Place) அளிக்கப்பட, (Torso) என்ற சொல் இங்கே பயன்படுகிறது. அதாவது தலை, கழுத்து, முன் கைகள், முன் கால்கள், கால்கள் அல்லது கைகள் இவைகள் தாம் (Torso) ஆகும். இவற்றில் ஏதாவது ஒன்று முடிவெல்லையைக் கடந்துள்ளதா என்பதைப் பொறுத்தே முதல் இரண்டு மூன்றாம் நான்காம் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.