பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



106

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


14. தடை தாண்டி ஓட்டங்கள்
(Hurdle Race)
(விதி - 163)

கீழ்க்காணும் குறிப்புக்கள், அதிகாரபூர்வமான தடை தாண்டி ஓட்டங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டவையாகும்.

ஆண்கள் பெண்கள்
1. 110 மீட்டர் 1. 100 மீட்டர்
2. 200 மீட்டர் 2. 400 மீட்டர்
3. 400 மீட்டர்

ஒவ்வொரு ஒடும் பாதையிலும் 10 தடைகள் நிறுத்தப்பட்டிருக்கும். அந்த அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2. தடையின் அமைப்பு: உலோகத்தாலாவது அல்லது அதற்கு இணையான பொருட்களினாலாவது மற்ற பாகங்கள் செய்யப்பட்டு, தடையின் மேற்புற உயரமானது மரத்தால் அல்லது மற்ற பொருத்தமான பொருளால் உருவாக்ககப்பட்டிருக்க வேண்டும்.