பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



108

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


ஒவ்வொரு தடையும் 2 தளங்களும் (Base) 2 உயரக் கம்பமும் (uprights) கொண்டு, ஒன்று அல்லது இரண்டுக் கு மேற்பட்ட குறுக் குக் கம் பங்களால் இணைக்கப்பட்ட ஒரு நீண்ட சதுரச் சட்டத்தால் ஆக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய நீண்ட சதுரச்சட்டம் ஒவ்வொரு அடித்தளத்தின் இரண்டு பக்க முனைகளிலிருந்தும் மேல் நோக்கிப்பொருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தடையும் அதன் உயரப் பகுதியில் தட்டி கீழே வீழ்த்த முயற்சிக்கும்பொழுது, 3.6 கிலோ கிராம் எடையை பிரயோகித்தால் தரையில் வீழ்த்த முடியும் என்ற எடையளவுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சிக்கும் ஏற்ற வகையில் உயரத்தை மேலே ஏற்ற, அல்லது கீழே இறக்கி விடுகின்ற வகையில் அமைக்கப்பட வேண்டும். அந்த உயரத்திற்கு ஏற்றவாறு எதிர்ப்பிரயோக எடைகள் (CounterWeights) கீழே பொருத்தியிருக்குமாறும் வைக்கப்படவேண்டும். அவ்வாறு வைக்கப்படும் எதிர்ப் பிரயோக எடைகள் 3.6 கிலோ கிராமில் இருந்து 4 கிலோ கிராமுக்கு மேற்பட்டுப் போகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு : இதை அறிந்து கொள்ள, ஸ்பிரிங் பேலன்ஸ் ஒன்றை தடையின் உச்ச உயரத்தில் மாட்டிவிட்டு, இழுக்கச் செய்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.