பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



110

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அல்லது கீழேயோ 3 மில்லி மீட்டள் அளவு உயர்ந்தோ அல்லது குறைந்தோ இருக்கலாம் என்பது தான் அந்த மாற்றமாகும்.

4. தடையின் உச்ச உயரத்தில் உள்ள பலகை (Bar) யின் அகலம் 0.70 மில்லி மீட்டள் தான் இருக்க வேண்டும். அந்தப் பலகையின் கனம் 10 முதல் 25 மில்லி மீட்டர் இருக்க வேண்டும். அந்தப் உச்சப் பலகை இரண்டு முனைகளிலும் நன்கு இறுக்கமாகவும் உறுதியாகவும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

5. முடிவான வடிவம் தடையின் உச்சத்தில் உள்ள பலகையானது கறுப்பு வெள்ளைப் பூச்சுக்களால் தீட்டியிருக்க வேண்டும். அதாவது வெள்ளை வண்ணம் பலகையின் மேற்புறத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டு வண்ணத்தின் மொத்த அகலம் 225 மில்லி மீட்டள் இருக்க வேண்டும். தடைகள் ஓடுகளப் பாதைகளில் நிறுத்தப்படுகிற போது, தடையின் கீழ்ப்புற சட்டங்கள் (கால்கள்) ஒட்டக்காரர்கள் ஓடிவருகிற பக்கமாக, இருப்பது போல் நிறுத்தி வைக்கப்படவேண்டும்.

6. எல்லா தடை தாண்டி ஓட்டங்களும் ஓடுகளப் பாதை வழியாகவே ஓடி முடிக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு போட்டியாளரும், அவரவருக்கு அளிக்கப்பட்ட ஒடும் பாதை வழியாகவே தொடர்ந்து ஓடி முடிக்க வேண்டும்.

7. தடையின் உயரத்தை நேரடியாக உச்சியில் தாண்டாமல் தடையின் பக்கவாட்டில் தாண்டி ஓடுகிறவர்; அல்லது தனது சொந்த ஓடுகளப் பாதையில் உள்ள