பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

113


நான்காவது தடையாகவும் வைத்திட பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.

குறிப்பு: நீர்த்தடைத் தாண்டலுக்கான பள்ளத்தை, ஒடுகளப் பாதைகளுக்குள்ளேயே அமைப்பதா அல்லது ஒடுகளத்திற்கு வெளியே அமைப்பதா என்பதைத் தீர்மானிக்கும்பொழுது, ஓடிடும் தூரமானது குறையவோ அல்லது கூடவே செய்யும் என்பதால், சரியான தூரம் இவ்வளவு தான் இப்படித்தான் அமையவேண்டும் என்பது பற்றித் தெளிவான விதிமுறைகள் தீட்டப்படவில்லை. நீர்த தொட்டியும் எங்கு இருக்க வேண்டும் என்பதும் விதிகளில் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே, தொடக்க எல்லைக் கோட்டிலிருந்து ஓடி முதல் தடையைத் தாண்டவரும் போட்டியாளர்கள் கூட்டமாக வந்து சிரமப்படத் கூடாது என்பதற்காக, தூரத்தில் வைப்பதுடன் முடிவுக்கோட்டிலிருந்து 68 மீட்டள் தூரத்தில் கடைசித் தடையை வைக்க வேண்டும் என்பதை, நன்றாக, கருத்தில் கொண்டு, அதன்படி செயல்படவேண்டும்.

உதாரணத்திற்காக, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அளவுகளைக் கண்டு தெளியவும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அளவுகளை அறிந்து அதற்குள்ளாக தேவையான அளவுக்குக் குறைந்தோ அல்லது அதிகமான தூரத்திலோ ஆரம்பக் கோட்டை அமைத்துக் கொள்ள வேண்டும்.

400 மீட்டள் தூரமுள்ள ஓடுகளத்தில், நீர்த் தடையை உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ அமைகின்ற