பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



116

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


குறிப்பு : இந்தத் தடை ஓட்டத்தில் வைக்கப்படுகின்ற முதல் தடையானது 5 மீட்டள் அகலம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற குறிப்பு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

6. தடை உட்பட நீர்தாண்டலுக்கும் உரிய தடையின் அகலமும் நீளமும் 3.66 மீட்டர் ஆகும்.

தண்ணி நிற்கும் அளவு ஓடம் பாதை தரை உயர அளவு இருக்க வேண்டும். தடையின் முடிவில் 0.70 மீட்டர் ஆழமும் 30 செ.மீ. அளவும் இடங்கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்த இடத்திலிருந்து, அடிப்பாகமானது ஒடுகளப் பாதைவரைக்கும் மேற்புறமாக அமைப்பு உயர்ந்து கொண்டே வந்து தண்ணித் தடையைத் தாண்டும் இடம் வரை தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.

தடையானது, தண்ணீர்ப் பகுதிக்கு முன்புள்ள தரைப் பகுதியில் உறுதியாகவும் இறுக்கமாகவும் பதித்திருக்க வேண்டும். இந்தத் தடையும் மற்ற தடைகளைப் போன்ற உயரம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

7. ஒவ்வொரு போட்டியாளரும் தண்ணீருக்கு மேற்புறமாக அல்லது தண்ணிரில் விழுந்து தாண்டி ஓடலாம். ஆனால், தண்ணி உள்ள ஒரு கரைப்பக்கம் அல்லது மற்றொரு கரைப்பக்கமாகக் காலை வைத்து ஓடுவது, அல்லது தடையின் வெளிப்புறமாகக் காலைவைத்து ஏமாற்றி ஓடுவது போன்ற முறைகளில் ஈடுபடும் போட்டியாளர்கள், போட்யினின்றும் விலக்கப்படுவார்கள்.

போட்டியாளர்கள் தடைகளைத் தாண்டி ஓடலாம். அல்லது தடைகளின் மீது ஏறித் தாண்டிக் குதித்து ஓடலாம்.