பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 9 _ 17) புகைப்படத்தின் மூலம் தேர்வு செய்யும் ஒரு நடுவர். 18) தலைமை புகைப்படத் தேர்வு நடுவர் 19) இரண்டு துணை புகைப்படத் தேர்வு நடுவர். 20) எலக்ட்ரானிக் மூலம் நேரம் அளந்தறியும் ஒரு நடுவர். 21) ஒன்று அலி லது அதற் கும் மேற் பட்ட அறிவிப்பாளர்கள் 22) அதிகார பூர்வமான ஒரு அளவு அறிவாளர் (Surveyor) 23) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவர்கள் 24) போட்டியிடுபவர்களைக் கண் காணிப்பாளர்கள்; அதிகாரிகள் மற்றும் பத்திரிகைக்கு அறிவிப்புத் தரும் அதிகாரிகள். சில அடையாளக்குறிப்புக்கள் 1. நடுவர்கள், தலைமை நடுவர்கள் இவர்களுக்கு சிறப்பான ஒரு அடையாளப் பட்டை அல்லது பேட்ஜ் அணிந்திருப்பதன் மூலம் பிறர் தெரிந்து கொள்ளுமாறு உதவுதல். 2. தேவையானால், சில உதவியாளர்களையும் நியமித்துக் கொள்ளலாம். மைதானம் எப்பொழுதும் அதிகாரிகளால் சூழப்பட்டுக் கூட்டமாக இருப்பதைத் தவிர்ப்பதில், போட்டி நடத்துபவர்கள் முக்கிய கவனம் செலுத்திட வேண்டும். 3. பெண்களுக்கான போட்டி நிகழ்ச்சி ஏதாவது ”டபெறும் பொழுது, முடிந்தவரை, ஒரு பெண் மருத்துவர் அங்கே இருக்குமாறு ஏற்பாடு செய்திடல் வேண்டும்.