பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அல்லது 26 மைல்கள் 385 கெஜமாகும்.

2. மருத்துவக் குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர், போட்டியாளர்களில் ஒருவரை, 'ஓட்டத்தை விட்டு நின்று கொள்ளவும்' என்று கூறி விட்டால், அந்தக் குறிப்பிட்ட போட்டியாளர் உடனே பணிந்து, ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

3. ஒடும் (வழியில்) பாதையில் எவ்வளவு தூரம் என்பது மைல் அல்லது கிலோ மீட்டர் என்றுக் குறித்துக் காட்டி, போட்டியாளர்களுக்குத் தெளிவாகத் தெரியுமாறு வைத்திருக்க வேண்டும்.

4. ஒட்டக்காரர்களுக்குத் தேவையான பானம் அல்லது ஆகாரம் (Refreshments) தருவதைப் போட்டியை நடத்துபவர்கள் தான் வழங்க வேண்டும். அந்த இடமானது போட்டி தொடங்கிய இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுவப்படவேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூரத்திலும் இது போன்ற பானம் வழங்குமிடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதல்லாமல், தண்ணிரும் கடற்பஞ்சு மெத்தையும் (Sponge) அளிக்கும் இடங்களை இரண்டு பானம் ஆகாரம் வழங்குமிடங்களுக்கு இடைப்பட்ட இடத்தில் நிறுவியிருக்க வேண்டும்.