பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

119


போட்டியாளர்களுக்கு வேண்டிய சிற்றுண்டி, பானம் முதலியவற்றைப் போட்டி அமைப்பாளர்களே வழங்கலாம். அல்லது தமக்குத் தேவையானவற்றைத் தமது ஆள் மூலம் தந்து, அந்தந்த இடங்களில் பெற்றுக் கொள்ள, போட்டியாளர்கள் ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

ஓடிக்கொண்டிருக்கும் ஒட்டக்காரர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களைத் தாங்களே கைநீட்டி எடுத்துக் கொள்ளுமாறு மேசை மீது வைத்திருக்கலாம். அல்லது ஓடிக் கொண்டிருப்பவர் கையை நீட்டும்பொழுது, அவரது கைகளில் கொடுக் கின்றவாறு தருகிற ஏற்பாடுகளையும் செய்து வைக்கலாம்.

குறிப்பிட்ட இடத்தில் வழங்குகின்ற பொருட்களைத் தவிர, அங்கீகரிக்கப்படாத இடங்களில் உண்ணும் பொருட்களைப் பெறுகிற ஒட்டக்காரர்கள், ஓட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகின்ற தண்டனையைப் பெறுவார்கள்.

5. மாரதான் ஒட்டப் போட்டியை நடத்துகின்ற பொறுபபேற்றிருக்கும் அமைப்பாளர்கள், ஒட்டக்காரர்களுக்கு எந்தவிதமான வெளி அபாயமும் விளையாது என்பதை முதலில் உறுதி செய்தாக வேண்டும்.