பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

123


3. அடையாள எல்லைகள் : (Check Marks) ஒட்டப்பாதைகளில் ஒடுகிற தொடரோட்டப் போட்டி நடைபெறும்பொழுது, ஒரு போட்டியாளர் தனது ஓடும் பாதையில் (எங்கே எப்படி குறுந்தடியைப் பெறவேண்டும் என் பதற்காக) அடையாளக் கோடு ஒன்றைக் குறித்துக்கொள்ள அனுமதியுண்டு. அதாவது, அவர் தான் அணிந்திருக்கும் காலணியினால் தரையைக் கிழித்து அடையாளம் வைத்துக்கொள்ளலாம். அல்லாமல் ஏதாவது ஒரு பொருளைக் கோட்டின்மீதோ அல்லது ஓடும் பாதையின் மீதோ வைத்துக்கொள்ள அனுமதியில்லை.

ஒடுகிறபாதையானது காலணியினால் கறி அடையாளம் செய்யக்கூடாத நிலையில் அமைந்திருந்தால், அப்பொழுது, போட்டி அமைப்பாளர்கள் தருகிற ஏதாவது ஒரு பொருளை அடையாளமாக வைத்துக்கொள்ளலாம், அதையும் தலைமை நடுவர் ஒத்துக்கொண்டால்தான் அவ்வாறு செய்துகொள்ள முடியும்.

4. குறுந்தடி : (The Baton) குறுந்தடியை ஒட்டம் முழுவதும் கையில்தான் எடுத்துச்சென்றாக வேண்டும். ஓடுபவர் கையிலிருந்து குறுந்தடி கீழே விழுந்துவிட்டால், தவறவிட்ட ஒட்டக்காரர்தான் எடுத்துக்கொண்டு ஓடவேண்டும். வேறு யாரும் எடுத்துத் தந்து உதவக்கூடாது. எல்லாவிதமான தொடரோட்டங்களிலும், குறுந்தடியை மாற்றிக்கொள்வதானது, 'மாற்றிக்கொள்ளும் பகுதிகளில்' மட்டுமே நடைபெறவேண்டும்.