பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

125


பகுதிக்குள் நிற்கவேண்டும் என்பதையும், அவ்வாறே தெளிவாக முடிவு செய்து நிறுத்திடவேண்டும்.

தொடரோட்டம் ஆரம்பித்து, எந்த அணியின் ஒட்டக்காரர் முதலில் வருகிறாரோ, அதற்கு ஏற்றாற்போல, குறுந்தடியை வாங்க இருக்கும் ஒட்டக்காரர்கள், உட்புற முதல்) ஓடும் பாதைக்கு வந்து நின்று வாங்கிக்கொண்டு ஒட வேண்டும்.

இவ்வாறு வாங்க இருப்பவர்கள் வரிசை முறையை தவறின்றி, தெளிவாகப் புரிந்து கொண்டு செயல்படவும் வேண்டும்.

6. சில தொடரோட்டங்களில், முதல் சுற்று ஓட்டம் மட்டும் ஒடும் பாதைகளில் ஓட வேண்டும். மற்ற சுற்றுகளை வேறு முறைப்படி ஓட வேண்டும் என்று அமைந்திருக்கிற பொழுது, மற்ற ஒட்டக்காரர்கள், இருக்கும் எல்லைக்குள்ளே தாங்கள் விரும்பிய இடத்தில் நின்று குறுந்தடியை பெற்றுக்கொண்டு ஒட அனுமதிக்கப்படுவார்கள்.

7. ஓடி வந்து குறுந்தடியைத் தனது பாங்கருக்குக் (Mate) கொடுத்து விடுகிற ஒட்டக்காரர்கள், மற்ற அணி ஒட்டக்காரர்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருந்திட, தங்களது ஓடும் பாதையை விட்டு வேறு பாதைக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, அவரது பாதைக்குள்ளே கட்டாயமாக இருந்தாக வேண்டும்.

யாராவது ஒரு ஒட்டக்காரர் வேண்டு மென்றே அடுத்த இடப்பாதைக்குள் ஓடி, அடுத்தவர்கள் வழியை மறித்தோ, தாராளமாக ஓடவோ முடியாமல், தொந்தரவு தந்தோ நடந்து