பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


1. மேலாளர் (The Manager)

குறிப்பிட்ட அந்த ஓடுகளப்போட்டிகளுக்கு முக்கிய பொறுப்பாளராக மேலாளர் விளங்குகிறார். போட்டிக்கான நிகழ்ச்சிகள் எல்லாம், குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நடைபெற இவள் பொறுப்பேற்று இயக்குகிறார்.

போட்டியைக் கண்காணிக்கும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வந்திருக்கின்றனரா என்று அறிந்து கொள்வதுடன், சிலர் வராத நேரத்து, மாற்று அதிகாரிகளைக் கொண்டு அப்போட்டி நிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடு செய்தும்; மைதானத் தலைவரின் உதவியுடன் வேலையற்றவர்கள் வீணாக மைதானத்திற்குள் குழுமியிருப்பதைத் தடுத்தும், போட்டிகள் தங்கு தடையின்றி சிறப்புற நடைபெற மேலாளர் பணியாற்றுகிறார்.

2. செயலாளர் (The Secretary)

போட்டி நடத்துவதற்கான பொறுப்பானவர்களை அழைத்துக் கூட்டம் போடுவதும், செயல்படும் மற்ற குழு அங்கத்தினர்களைக் கூட்டியும், அந்தந்தக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற முடிவுகளையும் தீர்மானங்களையும் தயாரித்து வைத்தல்.

போட்டி நடைபெறுவதற்குரிய ஆக்கபூர்வமா காரியங்கள் அனைத்திற்கும் இவரே பொறுப்பேற்று செயல்படுகிறார். போட்டி விழாவிற்கான அழைப்புகள் அனுப்புவது, மற்றும் முக்கியமான கடிதப் போக்குவரத்துக்களை நடத்தி, போட்டிகள் சிறப்புற நடந்தேறி இவரது பணி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.