பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

127


18. குழு ஓட்டங்கள்
(Team Races)
(விதி - 167)

1. குழு ஒட்டப் போட்டிகளில் , அதிக எண்ணிக்கையில் அடங்கிய ஒட்டக் காரர்களை உட்படுத்தியது தான் ஒரு குழுவாகக் கருதப்படுகிறது. எத்தனை ஒட்டக்காரர்கள் கொண்டது ஒரு குழு என்று ஏற்கனவே தயாரிக்கும் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் குறிக்கப்படல் வேண்டும்.

2. எந்தெந்த இடங்கள் (Stations) என்று இடங்களை முன் கூட்டியே குறிக்கப்படல் வேண்டும். ஓட்டத் தொடக்கத்தில், ஒவ்வொரு குழுவையும், ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின் செல்ல ஒருவர் பின் ஒருவராக நிறுத்தி வைக்க வேண்டும்.

3. தேவையானால், முன் கூட்டியே ஆரம்பச் சுற்றுப் GLTL 1956s (Preliminiary Rounds) வைத்துத் தேர்ந்தெடுக்கும் போட்டியையும் நடத்திக் கொள்ளலாம்.

4. முதல் தேர்வோட்டப்போட்டி (Heat) ஓடி முடித்த பிறகு, எக்காரணம் கொண்டும், அந்தக் குழுவின் ஒட்டக்காரர்களை மாற்றிக்கொள்ள முடியாது.

யாராவது ஒட்டக்காரர். அல்லது ஒட்டக்காரர்களுக்கு காயமோ அல்லது உடல்நலக்குறைவோ நேர்ந்தால்,