பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



128

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அதனை அதிகார பூர்வமாக அமர்த்தப்பட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தினால், தலைமை நடுவரின் அனுமதியுடன், மாற்றோட்டக்காரர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

நிாணயிக்கப்பட்ட முழு தூரத்தையும் ஓடி முடித்த ஆட்டக்காரர்களே, இறுதிப் போட்டியரில் ஒட அனுமதிக்கப்படுவார்கள்.

5. வெற்றிபெறும் குழுவிற்கு வெற்றி எண் (Point) அளிக்கப்படும் விதம் அந்தந்தப் போட்டி அமைப்பாளர்களது விருப்பம் என்றாலும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.

(அ) ஒவ்வொரு குழுவும், ஒடி முடிப்பதற்கேற்றவாறு வெற்றி எண்களை வழங்கலாம். ஒவ்வொரு குழுவிலும் வெற்றி எண் பெறுவதற்கான இடங்களை (Position) பெறாத குழுவிற்குக் கம்ப்யூட்டர் முறையில் விகிதாசாரப்படுத்தி வெற்றி எண்களை வழங்கலாம். தேவையான அளவுக்கு வெற்றி எண்கள் பெறாத குழுவானது, போட்டியினின்றே விலக்கப்படலாம்.

அல்லது

(ஆ) ஒவ்வொரு குழுவில் உள்ள ஒட்டக்காரர்களும் ஓடி முடிக்கின்ற இடத்தைப் (Position) பொறுத்து, அவர்களுக்குக் குறிப்பிட்ட வெற்றி எண்கள் வழங்கப்படும். இது போல் இடம் பெறாமல் ஓடி முடிக்கின்ற ஒட்டக்காரர்களை அல்லது ஓடி முடிக்காத ஒட்டக்காரர்களை உடைய குழுவிற்கு, கம்ப்யூட்டர் முறையில் விகிதாசாரப்படுத்தி வெற்றி எண்கள் வழங்கலாம்.

அல்லது