பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

129


(இ) ஒடி முடித்து இடங்களைப் பெறுகிற குழுவிற்கு குறிப்பிட்ட வெற்றி எண்களை வழங்கலாம்.

வெற்றி எண்களைப் பெற இயலாத வகையில், ஒடி முடிக்கின்ற ஒட்டக்காரர்களைக் கொண்ட குழுவையும்; ஒடி முடிக்கத் தவறுகிற ஒட்டக்காரர்கள் உள்ள குழுவையும் போட்டியிலிருந்தே விலக்கி விடலாம்.

அல்லது

(ஈ) ஒடி முடிக்களின்ற ஓட்டக்காரர்கள் எடுத்துக்கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு, குறைந்த நேரத்தில் ஓடி முடித்த குழுக்களைத் தேர்ந்தெடுத்தல், இப்படியாகத் திட்டமிட்டுக் கணக்கிட்டுத் தேர்வு செய்யலாம்.

6. ஒரு இடத்திற்கு (Place) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒட்டக்காரர்கள் சமநிலையாக ஓடிவந்து சிக்கல் ஏற்படுத்தினால், அந்த இடத்திற்குரிய வெற்றி எண்களை சமநிலையில் முடித்தவர்களுக்கு சரிசமமாகப் பங்கிட்டு வழங்கிடவேண்டும்.

7. இறுதிப் போட்டியின் போது, இரண்டு குழுக்கள் முதல் இடத்திற்கு சமநிலையில் வெற்றி எண்களைப் பெற்றிருக்கும்போது, அந்தந்தக் குழுவின் கடைசி ஒட்டக்காரர் ஓடி வந்து முடித்த ஓட்ட நேரத்தையும் கணக்கிட்டுப் பார்த்து, எது குறைந்த நேரம் என்பதாகக் கணித்து முடிவு செய்திடவேண்டும்.