பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



132

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


மற்ற போட்டி நடைமுறைகள் யாவும், ஒட்டப் போட்டிகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளைப் பின்பற்றியே நடத்தப்படவேண்டும்.

இ) காடு மலை ஒட்டப் போட்டிக்கான பாதைகள் அமைக்கும்பொழுது, அதிக உயரமான தடைகளையோ, அதிகப் பள்ளமான பகுதிகளையோ, அல்லது ஆபத்தை விளைவிக்கும் ஏற்றமாக உள்ள உயரங்களையோ, இறக்கமான சரிவுகளையோ, கடினமான பாறைப் பரப்புகளையோ அமைக்கக் கூடாது. அதாவது ஒட்டக்காரர்கள் தங்களது இயற்கையான ஆற்றலுக்கு மேற்பட்ட சக்தியை உபயோகித்தாலும், உபத்திரவத்துடன் முயற்சிகளை மேற்கொள்கின்ற தன்மைகளில் பாதைகளை அமைக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

செயற்கையான தடைகளை கட்டாயம் அமைக்கக் கூடாது. அப்படி அமைப்பது அவசியம் தான் என்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், ஓர் இயற்கையான அமைப்பில் திறந்தவெளிப் பகுதிகளில் அப்படிப்பட்டத் தடைகள் அமைந்திருக்குமாறு செய்வது சிறப்புக்குரிய அம்சமாகக் கருதப்படும்.

சில சமயங்களில், அதிக எண்ணிக்கையில் ஒட்டக்காரர்கள் பங்கு பெற்றிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் ஓடுவதற்கான பாதைகளில் குறுகலான சந்துகளை அல்லது அகலமற்ற ஒடுக்கான வழிகளை அமைக்க நேர்ந்தால், குறைந்தது 1500 மீட்டர் தூரத்திற்குள்ளாக