பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

11


3. நுண்ணியல் மேலாளர் (Technical Manager)

போட்டிநிகழ்ச்சிகளுக்கான பொறுப்புச் செயலர் (clerk of the Course)

நுண்ணியல் மேலாளர், மேலாளரின் கீழ் நேரடியாகப் பணி செய்யும் பொறுப்பினர் ஆகிறார்.

ஒடுகளப் பாதைகள், எறிவட்டங்கள், எறியும் சாதனங்கள் விழுகின்ற வட்டப்பகுதிகள், குதித்து விழும் பரப்புகள், தாண்டும் நிகழ்ச்சிகளுக்கான பகுதிகள், சரியாக ஏற் படுத் தப் பட்டிருக் கசின்றனவா என்பதையும் ; விதிகளுக்குட்பட்டவாறு அமைந்த விளையாட்டு சாதனங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கின்றனவா என்றும்; அவைகள் தரக் கட்டுப்பாட்டைச் சோதித்தறியும் நடுவர் ஒருவரால் சரி என்று ஒப்புதல் பெறப்பட்டனவா என்றும் பார்த்தறிவது இவரின் பெருங்கடமையாகும்.

ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சிக்குரிய குறிப்புத்தாள்கள், வெற்றியை அறிவிக்கும் முடிவு குறிக்கும் தாள்கள், சாதனை குறிக்கும் தாள்கள் போன்றவையும் சரியாகத் தயாரிக்கப் பட்டிருக்கினறனவா என்பதையும் இவர் கண்டறிந்து, குறிபார்த்து வைக்க வேண்டிய கடமையாளராகவும் இருக்கிறார்.

4. நிதிக்குழு (Jury of Appeal) ஒரு போட்டிக்கான நீதிக்குழு ஒன்றை உருவாக்கும் பொழுது, பொதுவாக 3 பேர்களுக்குக் குறையாமல் அல்லது 5 பேர்களுக்குக் குறையாமல் அமைத்திடல் வேண்டும்.