பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னும் நேரம் ஒதுக்கித் தர வேண்டியது இன்றியமையாததாகும்.

7 ஓட்டப் போட்டியில் ஒடிக் கொண்டிருக்கிற பொழுது, மற்றவர்களிடமிருந்து எந்தவிதமான உதவியோ அல்லது சிற்றுண்டி, பானவகைகள் போன்ற எதையும் பெறக்கூடாது.

8. வெற்றி எண்கள் (Scoring) ஒட்டப் போட்டியின் முடிவில் , ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஓடிய ஒட்டக்காரர்கள் யார் யார் முதல் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் (மற்ற இடங்களையும் சேர்த்து) பெறுகின்றாள்கள் என்பதை நடுவர்கள் தேர்ந்தெடுத்து முடிவு செய்வார்கள். ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றவர்களின் வரிசை எண்ணிக்கையைக் கூட்டி, எந்தக் குழுவில குறைவான மொத்த எண் ணிக கை பெற்றிருக்கிறதோ (LowestAggregate) அந்தக் குழுவே வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள்.

அ) மொத்தம் கூட்டி சரிபார்ப்பதில், ஒடி முடித்த எல்லா ஒட்டக்காரர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் குறிப்பிட்ட இடங்களைப் பெறவேண்டும் என்று முன்னரே குறிப்பிட்டிருந்த இடங்களைப் பெறுகிறவரது இடங்களைத் தான் கணக்கிட வேண்டும்.

பரந்த திடலில் நடத்தப்படுகிற போட்டிகளில், இந்த முறை பின்பற்ற முடியாது.