பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

141


20. தாண்டும் போட்டிகள்
(Jumping Events)
1. உயரத் தாண்டல்
(High Jump)
(விதி - 171)

1. போட்டியாளர் ஒரு காலால்தான் தரையை உதைத்துத் துள்ளிடவேண்டும். (Take-off)

2. ஒரு போட்டியாளர் தாண்ட முடியாமல் தவறுகிற சூழ்நிலைகள், கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

அ) உயரக் கம்பங்களின் இடையே வைக் கப்பட்டுள்ள குறுக் குக் கம்பத்தைக் கீழே வீழ்த்திவிடுதல்.

ஆ) குறுக்குக் கம்பத்தைக்கீழே கடந்து மறுபகுதித் தரையைத் தொடுதல் அல்லது கம்பத்திற்குப் பக்கவாட்டில் கடந்து மறுபடியும் தனது, உடம்பால் அல்லது ஏதாவது ஒரு உறுப்பால் கடந்து விடுதல். அதே நேரத்தில் உச்ச உயரத்தைக் காட்டும் குறுக் குக் கம்பத்தையும் கடக்காதபோது, அவர் தாண்ட இயலாமல் தவறிழைக்கிறார் என்று குறிக்கப்படுகிறார்.