பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

149



குறுக்குக் கம்பம் உருண்டையான வடிவம் கொண்டிருந்தால், அதன் குறுக்குவட்டம் (Diameter) குறைந்தது 25 மில்லி மீட்டரிலிருந்து அதிகபட்சம் 30 நில்லி மீட்டர் வரை அமைந்திருக்கலாம்.

உருண்டை வடிவக் குறுக்குக் கம்பத்தின் கடைசி இருபுறங்களும், உயரக்கம்பங்களில் உள்ள ‘தாங்கிகளில்’ உட்காருவது போல அமைந்திருக்க வேண்டும் என்பதால் அதன் இருபுற முனைப்பகுதியும் 25 அல்லது 30 மீட்டர் x 1.50 மி. மீட்டர் முதல் 200 மி. மீட்டர் வரை செதுக்கப்பட்டு, சீராக வைக்கும் நிலையில செம்மையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தாங்கிகளில் வைக்கப்படுகிற குறுக்குக் கம்பத்தின் கடைசி முனைப்பகுதிகள் வழவழப்பானதாக அமைக்கப்படல் வேண்டும். அந்த கடைசி முனைப் பகுதியானது ரப்பர் அல்லது அதுபோன்ற மற்ற பிற பொருட்களால் சுற்றி இணைக்கப்படாமல் இருக்கவேண்டும்; ஏனெனில், அப்படி ஏற்படுகிற அமைப்பானது குறுக்குக் கம்பத்திற்கும் தாங்கிகளுக்கும் இடையே வேறுபாட்டைக் காட்டுகின்ற வித்தியாசமான தோற்றத்தை உண்டு பண்ணிவிடும்.

16. குறுக்குக் கம்பத்தைத்தாங்கும் தாங்கிகளாக இருப்பவை தட்டையானதாகவும், நீண்ட சதுரம் உள்ளவையாகவும் இருக்க வேண்டும். ஒரு ‘தாங்கியின்’ அகலம் 40 மில்லி மீட்டர் நீளம் 60 மில்லி மீட்டர்.

இரண்டு தாங்கிகளும் ஒவ்வொரு உயரக் கம்பத்திற்கு ஒன்றாக இருக்கும். அவை உயரக் கம்பத்தில்