பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


எதிரெதிராக இருப்பதுபோல், உறுதியாக உள்ளே ஊன்றப்பட்டிருக்கும். அதன்மேல் குறுக்குக்கம்பம் வைக்கப்பட்டிருக்கும். அதாவது தாண்டுகிற உடலாளர் குறுக்குக் கம்பத்தைத் தொட நேர்கிறபொழுது, முன்புறமாகவோ, அல்லது பின்புறமாகவோ கீழே கம்பம் எளிதாக விழுந்து விடுவது போன்ற அமைப்பில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறுக்குக்கம்பத்தைத் தாங்குகின்ற தாங்கிகள், ரப்பர் போன்ற பொருட்களால் சுற்றி மூடப்பட்டிருக்கக் கூடாது. அல்லது துள்ளிக் குதிக்கும் இயல்புள்ள (Spring) பொருளாகவும் அமைந்திருக்கக் கூடாது.

17. உயரக் கம்பத்திற்கும், தாங்கியில் வைக்கப்பட்டிருக்கும் குறுக்குக் கம்பத்தின் கடைசி முனைக்கும் இடையில் 10 மில்லி மீட்டர் தூரமாவது இடைவெளி இருக்க வேண்டும்

18. தாண்டிக்குதிக்கின்ற பரப்பளவானது 5 மீ x 3 மீட்டர் என்ற அளவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பு : உயரக்கம்பங்களுக்கும் தாண்டி விழும் பரப்பளவுக்கும் இடையில் குறைந்தது 10 செ.மீ. தூரம் இடைவெளியாவது இருப்பதுபோல் அமைத்திடவேண்டும். அப்படி அமைப்பதானது குறுக்குக் கம்பத்தைத் தாண்டி மறுபுறம் தாண்டி பரப்பளவில் விழுகிறபோது, குறுக்குக் கம்பத்தைத் தட்டி விடாமல் இருக்கின்ற வசதியான நிலை ஏற்படும் என்பதால் தான்.