பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

155



குறிப்பு : தாண்ட உதவும் பெட்டியின் உட்புற அளவின் மேற்புறத்தில், இரண்டு உயரக் கம்பங்களையும் இணைக்கும் கோடாக, ஓடிவரும் நோக்கோண அளவில் 1 செ.மீ. அகலத்தில், ஒரு வெள்ளைக்கோடு போடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கோட்டை, இரண்டு உயரக்கம்பங்களின் வெளிப்புற எல்லை வரை நீட்டி விட வேண்டும்.

8. பிடிப்பு (Grip) நன்றாக உறுதியாக இருப்பதற்காக, கைகளிலோ அல்லது கோலிலோ பிடிப்பு தரும் பொருள் ஒன்றைப் (Substance) போட்டி நேரத்தில் தடவிக் கொள்ள, போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

முன் கைகளில் (Forearm) எதாவது காயங்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்வதற்காக முன் கை சுற்றிலும் இழுத்துப் பிடிக்கும் கவர்கள் (cover) போட்டுக் கொள்ளவும் அனுமதி உண்டு.

கைகளிலோ அல்லது விரல்களிலோ டேப் (Tape) சுற்றிக்கொள்ள அனுமதி இல்லை. ஆனால் கைகளில் (திறந்த) வெளிக்காயங்கள் இருந்து அதற்காகக் கட்டுப்போட்டுக் கொள்ளவும், கட்டுப்போட்டுக்கொண்டு தாண்டவும் அனுமதி உண்டு.

9. ஒரு போட்டியாளர், கீழ்க்காணும் முறைகளில், தாண்ட இயலாமல் தவறிழைத்து விடுகிறார் என்று அறிவிக்கப்படுகிறார்.