பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



இந்த விதிக் கட்டுப்பாடானது, கோலின் அடிபாகத்தில் நாடாவினால் சுற்றுவதற்குத் தடை செய்யவில்லை. கோலின் அடிப்பாகத்திலிருந்து குறைந்தது 0.30 மீட்டர் உயரத்திற்கு நாடாவினால் சுற்றிக் கட்டியிருக்கலாம். அப்படி செய்வதானது, கோலூன்றும் போட்டியில் வேகமாகக் கோலினை ஊன்றும்போது, கோலின் அடிப்பாகம் பழுதுபட்டுப் போகாமல் பாதுகாக்கவே, இந்த விதிமுறை பரிந்துரை செய்கிறது. ஓடிவரும் பாதை, உதைத்தெழும்பும் இடம், தாண்டி விழும் பரப்பளவு (The Runway;Take-off and Landing Area) 13. ஒடி வருகின்ற பாதையின் நீளம் எல்லையற்றது. ஓடிவருகிற பாதையின் குறைந்தபட்ச நீளம் 40 மீட்டர். அதன் குறைந்தபட்ச அகலம் 1.22 மீட்டர் ஆகும். குறிப்பு : வேண்டிய அளவு இடவசதி அமைந்திருந்தால், ஓடிவரும் பாதையை 45 மீட்டர் துரத்திற்குக் குறையாமல் அமைத்திருக்க வேண்டும். 14. ஓடிவரும் பாதையின் ஏற்ற இறக்க சரிவுத் தன்மையின் அளவு 1:100க்கும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓடிவரும் பாதையின் மொத்த சரிவளவானது ஓடிவரும் திசையிலிருந்து கோலூன்றும் திசை நோக்கி வருகிறபோது 1:1000 என்கிற அளவு இருப்பது போல் அமைத்திட வேண்டும்.