பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



19. குறுக்குக்கம்பம்: குறுக்குக் கம்பமானது மரத்தால் உலோகத்தால் அல்லது அதற்கு இணையான பொருளால், வட்ட வடிவத்திலோ அல்லது முக்கோண வடிவிலோ செய்யப்பட்டிருக்கலாம். ஒரு குறுக்குக் கம்பத்தின் நீளம் 4.48 மீட்டருக்கும், 4.52 மீட்டருக்கும் இடைப்பட்ட நீளம் உள்ளதாக இருக்க வேண்டும். ஒரு குறுக்குக் கம்பத்தின் அதிகபட்சமான எடை 2.25 கிலோ கிராம் ஆகும். ஒரு முக்கோண அமைப்புள்ள குறுக்குக் கம்பத்தின் ஒரு பக்கம் (Side) 28-இலிருந்து 30 மில்லி மீட்டர் அகலம் உள்ளதாக இருக்க வேண்டும். முக்கோண வடிவம் என்பதால் அதில் மூன்று கூர்மையான வரம்புள்ள பகுதிகள் இருந்தால், அதனால் தாண்டுபவருக்குக் காயம் எதுவும் நேர்ந்து விடாதபடி முனைமழுங்கிய அமைப்புடன் இருப்பதாக, குறுக்குக் கம்பம் அமைந்திருக்க வேண்டும். ஓர் உருண்டை வடிவமான (circular) குறுக்குக் கம்பத்தின் விட்டம் குறைந்த பட்சம் 25 மில்லி மீட்டரும், அதிக பட்சமாக 30 மில்லி மீட்டர் அளவுள்ளதாக இருக்கலாம். உருண்டைவடிவான குறுக்குக் கம்பத்தின் இருபக்க முனைகளும் உயரக்கம்பத்தில் உள்ள தாங்கிகளில் நன்றாக அமர்ந்திடும் வகையில் அதன் முனைகளிரண்டிலும் தட்டையாக செலுக்கி வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செதுக்கப்படுகிற அளவு 25 முதல் 30 மில்லி மீட்டர் x 15 மில்லி மீட்டர் வரை இருக்க வேண்டும். இவ்வாறு செதுக்கப்பட்டு, உயரக்கம்பங்களில் உள்ள தாங்கியில் அமரும் குறுக்குக் கம்பத்தின்