பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


கோலூன்றும் பெட்டி: (Box)

கடினமான, உறுதியானதாக அமைவது போன்ற பொருளால் இந்தப் பெட்டி செய்யப்பட்டிருக்க வேண்டும். பெட்டியின் நீளம் 1 மீட்டர். வாய்ப்புறம் 600 மில்லி மீட்டர் அகலம். கோல் கடைசியாக ஊன்றப்படும் உட்புறப் பெட்டியின் அகலம் 150 மில்லி மீட்டர், இந்தப் பெட்டியை தரையின் மேற்புறத்தில் சம அளவுடன் இருப்பது போல புதைத்திட வேண்டும். தரையின் மேற்புறத்திற்கு சமமாக பெட்டியின், நீளப் பகுதியினைப் புதைக்கும் போது, பெட்டியின் வாய்ப்புறத்திலிருந்து அடிப்புறம் வரை போகின்ற கோணத்தின் அளவு 105 டிகிரி அளவு இருக்க வேண்டும். தரை சமத்திலிருந்து கோலூன்றிடும் கடைசிப் பகுதி தனியான பெட்டி வரை அதாவது பெட்டி தொடக்கத்திலிருந்து கோலூன்றிடும் கடைசிப் பகுதியான பெட்டி வரை அதாவது பெட்டி தொடக்த்திலிருந்து இறுதி வரையில், 200 மில்லி மீட்டர் தூரம் இருக்க வேண்டும். பெட்டியின் அமைப்பானது, கீழிலிருந்து மேலே வெளிப்புறமாக விரிந்து வரும் பக்கப்பலகைகளும், இறுதியாகக் கோலினைத் தடுக்கும் பலகை (Stop Board) அமைப்பும் அடித் தளத்திலிருந்து 120 டிகிரி அளவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும. பெட்டியானது மரப்பலகையால் செய்யப்பட்டிருந்தால், அதன் அடிப்பகுதியிலிருந்து மேற்புறம் நோக்கி 2.5 மில்லி மீட்டர் அகலம் வரை தகரத்தைப் பதித்து (Sheet Metal) பிறகு 800 மில்லி மீட்டர் தூரம் வரை முன்னோக்கி வருவதுபோல அமைந்திருக்க வேண்டும்.