பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 163 22. நீளத்தாண்டல் (Long Jump) (விதி: 173) 1. ஒருவர் பின் ஒருவராக வந்து தாண்டுகிற வாய்ப்பினை, சீட்டுக் குலுக்கல் மூலமாகவே தேர்ந்தெடுத்திட வேண்டும். 2. ஒவ்வொரு போட்டியாளரும் தனக்குரிய வாய்ப்புகளில், அதிக தூரம் தாண்டியதையே கணக்கில் கொண்டு முடிவெடுக்கப்படும். 3. எட்டுப் போட்டியாளர்களுக்கு மேலாக தாண்டும் போட்டியாளர்களின் எண்ணிக்கை இருந்தால் அவர்களுக்கு முதலில் 3 வாய்ப்புகள் (Trials) தரவேண்டும். அவர்களில் அதிக தூரம் தாண்டிய முதல் எட்டு பேர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த எட்டு பேர்களுக்கும் மீண்டும் 3 வாய்ப்புகள் தரவேண்டும். எட்டாவது போட்டியாளரைத் தேர்ந்தெடுக்கும் முதல் பூர்வாங்க வாய்ப்பில், (Trials) சமநிலை (Tie) வந்தால், அவர்களுக்கு மீண்டும் 3 வாய்ப்புகள் தந்து, அவற்றில் சிறந்த தாண்டுதலுக்குரியவரைத் தேர்ந்தெடுத்திட வேண்டும். ஒரு போட்டிக்கு 8 போட்டியாளர்கள் அல்லது பிட்டுக்கும் குறைவான போட்டியாளர்கள் வந்திருந்தால், அவர்கள் அனைவருக்கும் 6 தாண்டும் வாய்ப்புக்களை அளிக்க வேண்டும்.