பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


14. பிளாஸ்டிசின் அடையாளப் பலகை: நல்ல உறுதியாய் அமைந்த இந்தப் பலகை, 98 மில்லி மீட்டர் முதல் 102 மில்லி மீட்டர் அகலமும், 121 மீட்டர் முதல் 122 மீட்டர் வரை நீளமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அந்தப் பலகை மீது பிளாஸ்டிசின் அல்லது அதற்கு இணையான பொருளால் பதித்திருக்க வேண்டும். அந்தப் பலகையின் பரப்பளவு, உதைத்தெழ உதவும் பலகை அளவு சமத்திற்கு, 30 டிகிரி அளவில் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓடிவரும் திசை நோக்கி உதைத்தெழ உதவும் பலகைக்கு சற்று உயரமாக அதாவது 7 மில்லி மீட்டர் உயரத்தில் பதித்திருக்க வேண்டும். ஓடிவரும் பாதையில், உதைத்தெழ உதவும் பலகையில் முன்புறமாக அதாவது தாண்டிவிழும் பரப்புக்கு அருகாமை தூரத்தில் இருப்பது போல, இந்தப் பலகை வைக்கப்படவேண்டும், அதன் அமைப்பானது, ஓடிவந்து தாண்டுபவரின் உடல் எடை, வேகம் இவற்றைத் தாங்குகின்ற தன்மையில் அமைந்திருக்க வேண்டும். பிளாஸ்டிசின் பதிக்கப்பட்ட அந்த சிறு பலகையானது, தாண்டுபவரின் காலணி பட்டதும் வழுக்காத தன்மையில், உறுதியுடன் காலுக்கு பிடிப்புத் தருகின்ற தன்மையில் அமைந்திருக்க வேண்டும். அந்தப் பிளாஸ்டிசின் பலகைமீது காலணியின் ஆணிகள் பதிந்திருந்தால், அந்தச் சுவட்டினை அழித்துவிட,