பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

169


அதன்மீது கனமான உருளையை உருட்டினால், அது அழிந்துபோகும். மீண்டும் பலகை பயன்படுத்துவதற்கேற்ற முறையில் தயாராகிவிடும். குறிப்பு: பதித்திருக்கும் ஒரு பிளாஸ்டிசின் பலகைபோல, மேலும் ஒரு பலகையைக் கைவசம் வைத்திருந்தால் காலணி சுவடுபட்டதும் அதை அழிப்பதற்காக எடுத்துவிட்டு, அடுத்த பலகையைப் பதித்து, விரைவாகப் போட்டியை நடத்திச்செல்ல உதவுகிறது என்பதை அனுபவங்கள் மூலம் அறிந்து வைத்திருப்பதால், மாற்றுப் பலகை ஒன்றையும் வைத்திருப்பது செளகரியமாக இருக்கும்.

தாண்டிவிழும் பரப்பு: (Landing Area)

தாண்டிவிழும் மணற்பரப்பின் அகல அளவு குறைந்தது 2.75 மீட்டராவது இருக்க வேண்டும். ஓடிவரும் பாதைக்கு கடுமையாக அமைந்து இருப்பதுபோல, தாண்டி விழும் பரப்பளவு அமைந்திடவேண்டும். குறிப்பு: ஓடிவரும் பாதையின் மையப்பகுதியும், தாண்டிவிழும் பரப்பின் மையப்பகுதியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பதுபோல, தாண்டிவிழும் பரப்பினை அமைத்திடவேண்டும். அவ்வாறு முழுபரப்பும் நேர்க்கோட்டில் அமையவில்லையென்றால், தாண்டிவிழும் பரப்பில் எந்த அளவுக்கு நேர்க்கோட்டில் இருக்கிறது என்பதை அளவை நாடாக்கொண்டு அளந்து பார்த்து, நேர்க் கோட்டுக்கு சரியாக