பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அமைந்திருக்கும் பரப்புவரை இறுதி செய்து, தாண்டிவிழும் பரப்பினை அமைத்திடவேண்டும்.

அளக்கும் முறை: (Measuring)

15. போட்டியாளர்கள் தாண்டி விழுந்த தூரத்தை, அளக்க, எந்த இடத்தில் அவரது உடலின் ஏதாவது ஒரு உறுப்பு தொட்டதோ, அந்த இடத்தை தெரிந்து கொண்டு, அந்த இடத்திலிருந்து தாண்டுகின்ற கோடு வரையிலும் உள்ள இடைப்பட்ட தூரத்தைத் தான் அளந்திடவேண்டும். நேராக ஒருவர் தாண்டவில்லையென்றால், தாண்டுகின்ற கோட்டினைப் பக்கவாட்டில் நீட்டி விட்டு, அங்கிருந்து தாண்டி விழுந்த இடத்திற்கு நாடாவை நேராகப் பிடித்து, அளக்க வேண்டும். அளக்கும் பொழுது, நேர்க் கோட்டளவில் தாண்டுகின்ற கோட்டிலிருந்து நாடாவை இழுத்துப் பிடித்து, அளந்திடவேண்டும். 16. எந்தத் தாண்டலையும் அளக்கின்ற பொழுது, சரியான அளவினை எடுப்பதற்காக, தாண்டிவிழும் மணற்பரப்பின் உயரமும், தாண்ட உதவும் பலகையின் உயரமும் சம அளவில் இருப்பது போல, சரிசெய்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்பொழுதும் தாண்ட உதவும் பலகை உயரம், மணற்பரப்பின் உயரம், தாண்டி விழுகிற பரப்பின் உயரம் எல்லாம் ஒரே நோக்கோட்டளவில் இருப்பது போல வைத்திருக்க வேண்டும்.