பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

171


23. மும்முறைத் தாண்டல்
(Triple Jump)

(விதி - 174)


போட்டிக்கான விதிகள் :

1. ஒவ்வொருவராக ஓடி வந்து தாண்டுகிற வரிசை முறை வாய்ப்பு, சீட்டுக் குலுக்கல் மூலமாகத் தேர்ந்தெடுத்து, முடிவு செய்யப்படும்.

2. ஒரு போட்டியாளர், தாண்டுகிற எல்லா தாண்டும் வாய்ப்புக்களிலும், அதிகமான, சிறந்த வாய்ப்புக்களை எல்லாம் போட்டி முடிவினைக் காண, குறித்துக் கொள்ளப்படும்.

3. போட்டியில் கலந்து கொள்ள 8 போட்டியாளர்களுக்கு மேல் இருந்தால், முதலில் 3 தாண்டும் வாய்ப்புக்களை அளித்து, அவர்களில் அதிகமாகத் தாண்டிய முதல் 8 பேர்களைத் தேர்ந்தெடுத்து; அந்த இறுதி 8 பேர்களுக்கும் மேலும் 3 வாய்ப்புக்களைத் தாண்டுவதற்காக வழங்க வேண்டும்.

முதலில் அப்படித் தேர்ந்தெடுக்கும்பொழுது, 8வது இடத்திற்காக சமநிலை (Tie) ஏற்பட்டால், சமநிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் மேலும் 3 தாண்டும் வாய்ப்புகள் வழங்கி, அதில் முதல் நிலையானவரை மட்டும் தேர்ந்தெடுத்திட வேண்டும்.